‘ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ –  விமர்சனம்!

Ramayana: The Legend Of Prince Rama – Review

மிகவும் பழமையான இந்திய இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். இது சமஸ்கிருத மொழியில் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது. அதன் பின்னர் உலகில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தமிழில் கம்பர் தன்னுடைய கற்பனைகேற்ப எழுதினார். இது கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது.

ராமாயனம், ராமனின் வரலாற்றை சொல்லுவதால் அப்பெயர் பெற்றது.  இது அநேகருக்கும் தெரிந்த கதை தான்.

அயோத்தியின் இளவரசர் ராமர். இவர் ‘மிதிலை’ நாட்டின் மன்னர் ஜனகனின் மகளான இளவரசி சீதாவை மணந்தார். கைகேயியின் சூழ்ச்சியால், ராமர் தனது தந்தை தசரதனால் , மனைவி சீதா மற்றும் சகோதரர் லக்ஷ்மணனுடன், ராமர் 14 வருடங்கள் சென்றார். அப்படி, காட்டில் தங்கியிருக்கும் போது சீதை இராவணனால் கடத்தப்பட்டாள்.

அதன் பின்னர், ராமர் வானரப் படையுடன் இலங்கை சென்று, இராவணனை கொன்று, சீதையை காப்பாற்றினார். அதன் பிறகு,  சீதை தனது கர்ப்பை நீருபிக்க தீயில் இறங்கினாள். அவள் உண்மையானவள் என்பதால் நெருப்பு அவளை ஒன்றும் செய்யவில்லை. அதன் பிறகு இராமரின் நீதியான ஆட்சி அயோத்தி நாட்டிற்கு பொற்காலத்தை ஏற்படுத்தித் தந்தது. இது திரை வடிவத்தில் சீரியல்களாகவும், திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டன.

இப்போது, அனிமேஷன் வடிவத்தில் சிறுவர்கள் எளிதில் ராமாயணத்தை புரிந்து கொள்ளும் வகையில், ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’  உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை கவரும் விதத்தில், அவர்களுக்கு பிடித்த  அனிமேஷன் காட்சிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கும்ப கர்ணன் இடம் பெறும் போர்க் காட்சிகள், வானரப்படையின் சாகசம், அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வரும் காட்சிகள், பறக்கும் தேர், குதிரைகள் ஆகியன, சிறுவர்களை வாய்பிளந்து பார்க்க வைக்கும்.

பின்னணி இசை, ஒலி வடிவமைப்பும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் ஆகியவை சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்க்கும் படி இருக்கிறது.