“மாண்புமிகு மகளிர்-2020” சர்வதேச மகளிர் தினவிழா!

SAKYA CHARITABLE TRUST WOMENS DAY

சாக்யா அறக்கட்டளை சார்பில் “மாண்புமிகு மகளிர்-2020” என்கிற தலைப்பில் சர்வதேச மகளிர் தினவிழா மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் ஊராட்சி, மேட்டுக்காலனியில் இனிதே நடைபெற்றது.  இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற களஞ்சியம் சின்னப்பிள்ளை, ஊராட்சி மன்ற தலைவர் சே.பாண்டீஸ்வரி சேவகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  சிறப்புரை நிகழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள்.

சாக்யா அறக்கட்டளையின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான முனைவர் சே.செந்திலிங்கம், அறங்காவலர் சிராஜ், மக்கள் பணியாளர் சேவகன், அறக்கட்டளையின் வளர்ச்சி ஆலோசகர் ரஷ்யா சிராஜ், எல்ஐசி வளர்ச்சி அதிகாரி செல்வகுமார், பட்டிமன்ற பேச்சாளர் கிருஷ்ணவேணி, அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் பாலியல் தொல்லை குறித்து சிறப்பான வீதி நாடகத்தையும் பறை ஆட்டத்தையும் செல்லமணியின் வேர்கள் கலைக்குழு நிகழ்த்தியது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் ராமமூர்த்தி, மகேஸ்வரி, கருப்பசாமி மற்றும் பல தன்னார்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்ட குழந்தைகள் பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரையும் நன்றி பாராட்டி மகிழ்கிறது சாக்யா அறக்கட்டளை.

இந்த மகளிர் தின சிறப்பு நிகழ்வினை நடத்த உதவியாக இருந்த பேராசிரியர் முனைவர் பேபி ராணி(VVV college, Virudhunagar), கரும்பாலை முரளி, உமேஷ் பவர் ரவி, மு. ராதிகா செந்திலிங்கம் மற்றும் எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி செல்வகுமார் ஆகியோர்களுக்கு சாக்யா அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.