சஞ்ஜீவன் – விமர்சனம்!

மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஐந்து நண்பர்களின் வாழ்க்கையில் சில நாட்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே சஞ்ஜீவன். கதை என சொல்வதற்கு எதுவும் இல்லை.

வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் வினோத் லோகிதாஸ் ஸ்நூக்கர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுகிறார்.  இந்த வெற்றியினை கொண்டாடுவதற்காக அனைவரும் ஜாலி ட்ரிப் செல்கின்றனர். அதில் நணபர் ஒருவரின் பொறுப்பற்ற செயலால் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.. அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே சஞ்சீவன்.

வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஐந்து  என, படத்தில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். எதார்த்தமான கதாப்பாத்திரப்படைப்பு!

பைக்கில் காதலியின் வீட்டினைச் சுற்றி, சுற்றி வந்து காதலிக்கும் ஷிவ்நிஷாந்தின் நடிப்பு அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுகிறது. அதேபோல் கண்ணியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் லோகிஸ்தாஸ் அக்கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். அதேபோல் ரவையை நக்கிவிட்டு போதையாகும் யாஷின் சிறப்பாக நடித்து இருக்கிறார். பொதுவாக எல்லோருமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என்று தான சொல்ல வேண்டும். திவ்யா துரைசாமியும் நிறைவான நடிப்பினை கொடுத்து இருக்கிறார்.

சில காட்சிகளில் இளையராஜாவின் பாடல்களை சாமர்த்தியமாக பயண்படுத்தி இருக்கிறார், இசையமைப்பாளர், தனுஜ் மேனன். பின்னணி இசையும் பாடல்களும் பரவாயில்லை!  ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஸ்வர்ணகுமார் கவனம் பெறுகிறார்.

கதை, எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் மணி சேகர், வெற்றி வாய்ப்பினை தவற விட்டுள்ளார்.