சாலை ஓரம் செருப்பு தைத்து பிழைத்து வரும் குடிகாரர், பாடகர் அந்தோணி தாஸ். இவரது மகள் சிறுமி பிரியா, யோகிபாபு தைக்க கொடுத்த ஷூவினை தொலைத்து விட்ட நிலையில், அதற்கு பதிலாக வேறு ஒரு ஷூவினை அவருக்கு கொடுக்கிறார். அந்த ஷு யோகிபாபுவின் வாழ்க்கையில் பல முனேற்றங்களை கொடுக்கிறது.
இந்நிலையில் சிறுமிகளை பாலியலுக்காக கடத்தும் ஜார்ஜ் விஜய் நெல்சனின் கும்பலால் கடத்தப்படுகிறார் பிரியா. இவரைப்போல் பல சிறுமிகள் கடத்தப்பட்டு ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர். இவர்களிடமிருந்து தப்பிக்க சிறுமிகள், பிரியாவின் தலைமையில் முயற்சிக்கின்றனர். அவர்கள் தப்பித்தார்களா.. இல்லையா? என்பதை, படம் பார்ப்பவர்களை சித்ரவதை செய்யும் திரைக்கதையால் சொல்லியிருக்கிறார், கதை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குனர் கல்யாண் தேவ்.
சிறுமிகள் கடத்தலை மையக் கதைக் கருவாக கொண்டு அதை காமெடியாக, சொல்வதா, சீரியஸாக சொல்வதா. என்பதில் குழம்யிருக்கிறார்.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பாலா ஆகியோரது கூட்டணியின் காமெடி காட்சிகள் மகா மட்டமான மொக்கை காட்சிகள்.
சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் காட்சிகளின் சித்தரிப்பு அதீதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவை ரசிகர்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துகிறது..
டைம் ட்ராவல் ஆராய்ச்சி செய்யும் திலிபனின் கதாபாத்திர வடிவைமைப்பு முழுமையற்றதாக இருக்கிறது.
2 மணி நேரத்திற்கும் குறைவான படம் என்றாலும், 3 மணி நேரம் பார்த்த அயற்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில்.. இந்த ஷூ யாருக்கும் உதவாது!