விஜய்சேதுபதி நடிப்பினில் வெளியான ‘சிந்துபாத்’ படத்தினை, இயக்கிய இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம், ‘சித்தா’. இந்தப்படத்தின் கதையை கேட்ட நடிகர் சித்தார்த், ‘இடாகி எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனம் சார்பில், அவரே தயாரித்து நடித்துள்ளார். இவருடன் சகஸ்ரா என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மதுரை புற நகரப் பின்னணியில் உருவாகியுள்ள சித்தா, சித்தப்பாவிற்கும் அண்ணன் மகளுக்கும் உள்ள பாசப்போராட்டத்தை மய்யமாக கொண்டுள்ளது. குழந்தைகள் பேசிப்பழகும் வயதினில் சித்தப்பாவை திக்கித் திணறி, ச்சித்தா.. என அழைப்பதுவே, ‘சித்தா’ என பொருள் படுகிறது. சித்தப்பா தன் அண்ணன் மகளை தேடி மீட்பது தான் கதை என்கின்றனர். அப்பாவுக்கும் மகளுக்குமான படங்கள் எத்தனையோ வந்திருந்தாலும், இவர்களுடைய பாசம் பார்ப்பவர்களை உருக வைக்கும் என்கிறார், இயக்குநர் சு. அருண்குமார்.
சில நாட்களுக்கு முன்னர் வெளியான சித்தா படத்தின் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை உருவாக்கியிருப்பது, குறிப்பிடத்தக்கது. பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்க, திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.
சித்தா, வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில், வெளியாகவிருக்கிறது.