21 நாட்களில் உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர் “அமுதா”.

PS. அர்ஜூன் என்கிற புதுமுக இயக்குனரின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமுதா”. சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. 50 இலட்சத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்சினிமாவுலகில் அவ்வபோது சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்களே தனி முத்திரை பதித்து வரும் நிலையில் ‘அமுதா’ ரசிகர்களிடையே நிச்சயம் வரவேற்பை பெரும் என்கிறார் இயக்குனர் PS. அர்ஜூன்.

ஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள் , யார் கொலையாளி , எதற்காக இந்த கொலை நடக்கிறது என்பது தான் ‘அமுதா’. மூன்று வித கதையோட்டத்தில் விருவிருப்பாக விரல் நகம் கடிக்கும் அளவிற்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

படத்தில் மூன்று பாடல்கள் , ஜெயச்சந்திரன், சித்ரா மற்றும் வினித்ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்கள். இசை அருண் கோபன். விரைவில் அமுதா திரைக்கு வர இருக்கிறது.