போண்டா மணிக்கு தேசியத் தலைவர் படக்குழு நிதியுதவி!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவிலிருந்து மீண்டு வந்து இன்று அவர் நடித்திருந்த தேசிய தலைவர் திரைப்படத்தின் டப்பிங் பேசினார். தான் தேவரை தொடர்ந்து வணங்கி வந்ததால் மறுபிறப்பு பெற்று பிழைத்தேன், என்று பெருமிதம் கொண்டார். தேசிய தலைவர் படக் குழு சார்பாக தேவராக நடிக்கும் படத்தின் நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் உதவித்தொகையை வழங்கினார். உடன் இயக்குனர் அரவிந்தராஜ் , ஏ எம் சௌத்ரி.  போண்டா மணி உதவிக்கு நன்றி கூறி, தேசிய தலைவர் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.