தனுஷ் மருமகன் பவிஷ் – குஷ்பு மகள் அவந்திகாவுடன் இணையும் வருண்!
கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் ‘அட்டாக்கர்’
தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத கைப்பந்து (Volleyball) விளையாட்டை மையமாகக் கொண்டு, முற்றிலும் ஒரு புதிய உணர்ச்சிப்பூர்வமான ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் திரைப்படம் ‘அட்டாக்கர்’ (Attacker). ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் (Zinema Media and Entertainment Limited) நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தினேஷ் ராஜ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, தமிழ் திரையுலகிற்குப் புதிய சிந்தனைகளுடன் அறிமுகமாகும் இயக்குநர் தாமோ நாகபூஷணம் இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி மெகா ஸ்டார் தனுஷின் மருமகனான பவிஷ், அசாத்திய திறமைமிகு கைப்பந்து விளையாட்டு வீரராக முதன்மைப் பாத்திரத்தில் (Male Lead) நடித்துத் தந்து கலைப்பயணத்தைத் தொடங்குகிறார். அவருக்கு இணையாக, தென்னிந்தியாவின் லேடி டைட்டன் குஷ்பு மற்றும் முன்னணி இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகளான அவந்திகா கதாநாயகியாக (Female Lead) அறிமுகமாகிறார்.
திரைப்படத்திற்கு கூடுதல் நம்பகத்தன்மையையும் எதார்த்தமான விளையாட்டுச் சூழலையும் (Realistic Sports Vibe) வழங்குவதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் புதிய திறமையாளர்கள் மற்றும் நிஜ வாழ்க்கையில் மைதானங்களில் விளையாடும் அசல் கைப்பந்து விளையாட்டு வீரர்களை (Real Volleyball Players) ஒன்றிணைத்துப் படக்குழுவினர் தற்பொழுது அசுர வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

‘பிக் பாஸ் தமிழ் – சீசன் 5’ நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் மத்தியிலும் பேராதரவைப் பெற்று, பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிறந்த கலைஞராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள நடிகர் வருண், இத்திரைப்படத்தில் மிகவும் வலிமையான, சவால்கள் நிறைந்த ஒரு பிரதான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.
‘ஒரு நாள் இரவில்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வருண், அதனைத் தொடர்ந்து ‘போகன்’, ‘வனமகன்’, ‘எல்.கே.ஜி’, ‘கோமாளி’, ‘பப்பி’ மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘ஜோசுவா இமை போல் காக்க’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் தந்து அசாத்திய ஆக்ஷன் மற்றும் குணச்சித்திர நடிப்பால் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ் மற்றும் அவந்திகா ஜோடியின் புத்துணர்ச்சியான காம்போவுடன், நடிகர் வருணின் அதிரடியான நடிப்புப் பங்களிப்பும் இணைந்துள்ளதால், ‘அட்டாக்கர்’ திரைப்படம் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வம், அசாத்திய எமோஷன்ஸ் மற்றும் மன உறுதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு முற்றிலும் புதியதொரு சினிமா அனுபவத்தை வழங்கும் என்று படக்குழுவினர் பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.