சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுடன் இரண்டற கலந்து இருப்பவர்கள், உணவு விநியோக்கிக்கும் ஸ்விக்கி – ஜொமேட்டோ ஊழியர்கள் தான். கொரோனா காலக்கட்டத்தின், ஊரடங்கின் போது இவர்களது சேவை அளப்பரியாதது.
இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தினமும் 1 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் நம்ம வீடு வசந்த பவனின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி ஸ்விக்கி – ஜொமேட்டோ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடை பெற்றது.
சென்னை, வடபழனி 100 அடி ரோட்டில் உள்ள நம்ம வீடு வசந்த பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பு இந்தியாவில் நடக்கும் முதல் சந்திப்பாகும்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ‘நம்ம வீடு வசந்த பவனி’ன் செயல் தலைவர் ஹரிஷ், ஜொமேட்டோ தலைவர் சக்தி, ஸ்விக்கி தலைவர் சுந்தர், ‘நம்ம வீடு வசந்த பவன்’ சேர்மன் ரவி முத்து கிருஷ்ணன், மேனேஜிங் டிரைக்டர் ஸ்வர்ணலதா ரவி, இயக்குநர் ஆனந்த் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
மழை, வெயில் உள்ளிட்ட எல்லா விதமான கால சூழ்நிலைகளிலும் உணவுகளை விநியோகித்து வரும் இவர்கள், தங்களின் இயற்கை உபாதைகளுக்கான தேவைகளுக்கு வசந்த பவனை பயன்படுத்திக் கொள்ளலாம். என்பதை தெரிவித்து அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வசந்த பவன் நிர்வாகம் பாராட்டியது.