ஓரினச்சேர்க்க்கையாளர்களின் காதலை மைய்யமாக கொண்டு உருவாகியிருக்கும் படம், வாழ்வு தொடங்குமிடம் நீதானே. இதில் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். இப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.
‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் வெளியீட்டினை ஒட்டிய பத்திரிக்கையாளர்கள் சந்த்திப்பின் போது, தயாரிப்பாளர் நீலிமா இசை கூறியதாவது…
‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, என்னுடைய கணவர் இசை, ‘அவசியம் உருவாக்க வேண்டும். ஏனெனில் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் செல்லும் பாதையில், இது போன்ற படங்கள் அவசியமானது என்றார். அதனாலேயே இந்தப்படம் உருவானது.
ஷார்ட் ஃபிளிக்ஸில் வெளியான லேட்டஸ்ட் ஹிட் என்றால் அது ‘பாணி பூரி’ தான். அனைத்து ஜானரிலும் படங்களை உருவாக்க வேண்டும் என அவர்கள் விரும்பிய போது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ தொடங்கியது.
அதன் பிறகு இந்தப் படத்திற்கு ஏராளமான திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்தனர். எங்களுடைய தயாரிப்பு நிறுவனம், குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்க முடியும் என்ற இலக்கை கொண்டது. இன்னும் இதுபோன்ற வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை தயாரிக்கவிருக்கிறோம் என்றார்.