ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
பங்குச்சந்தைகளில் தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாம். நடிகர் விக்ரம் பிரபுவின் 26வது படமாக அமைந்துள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த புதிய படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கவுள்ளது.
நடிகர் நடிகையர் தேர்வு நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.