பிரிவினைகளை அடித்து நொறுக்கும் ‘ஆயுதம்’ மனிதம் – கமல்ஹாசன்!

கமல்ஹாசன், இயக்குனர், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் ‘ஜிப்ஸி’  திரைப்படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படம் குறித்து பேசிய கமல்ஹாசன் ”மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”. என்றார்

.