ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து, டீகே இயக்கியுள்ள படம் காட்டேரி. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ‘கொரோனா’ இரண்டாவது அலை பரவி வருவதாகவும் இதில் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கூறி படத்தின் ரிலீஸை படக்குழு தள்ளிவைத்துள்ளனர்.
கே.இ.ஞானவேல்ராஜாவின் சொந்த பிரச்சனைக்காகவே காட்டேரி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனோ பரவுவதாக மக்களிடையே பீதி ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ள திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.