‘ஃபில்டர் கோல்ட்’ : விமர்சனம்.

தயாரிப்பாளர் : ஆர்.எம்.மனு

இயக்கம் :விஜயபாஸ்கர்

நடிகர்கள் :விஜயபாஸ்கர், டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவ. இளங்கோ, நட்ராஜ், சாய் சதீஷ்.

 

பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் திருநங்கைகளின் குற்றவியல் உலகத்தையும், அவர்களின் வாழ்வியலையும் பேசும் திரைப்படமாக ‘ஃபில்டர் கோல்ட்’ படத்தின் திரைக்கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலிலும், சட்டவிரோதமான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுபவர்கள் என்று அழுத்தமாக  சித்தரிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது.

திருநங்கைகள் தங்களுக்கான ஒரு கௌரவமான அடையாளத்தை, ஆண் மற்றும் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஏற்படுத்தி வருகின்றனர். அரசு பதவியில் சிலர் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் இப்படி ஒரு படமா!!

திருநங்கை ‘விஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் விஜயபாஸ்கர் பல இடங்களில் நடிப்பு திறமையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

டோராவிற்கும், ரமேசிற்கும் இடையேயான காதலும் காமத்திற்கானது போல் இருக்கிறது. அவர்களுக்கு ஏற்பட்ட சம்பவம் மனதில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஒளிப்பதிவு, பின்னணி இசை என எதுவும் கவனத்தைக் ஈர்க்கவில்லை.

‘ஃபில்டர் கோல்ட்’ என அழகான தலைப்பை யோசித்தவர்கள், கதையையும், திரைக்கதையையும் யோசிக்க தவறிவிட்டனர்!