அஜய் கார்த்தி – ‘ஹார்ட் பீட்’ தீபா பாலு இணையும் ‘ஸ்டேஷன்’!
70% of the Film Set Inside a Police Station: Shooting in Full Swing for Maran Karthikeyan’s ‘Station’ in Chennai!
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ ஆகிய படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தொடரான ‘ஹார்ட் பீட்’ மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’ (STATION – Hunt For Survival). கேபி இன்போடெயின்மென்ட் (KP Infotainment) சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்குகிறார்.
காதல், குற்றம் மற்றும் அதிரடி என மூன்றும் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் திரைக்கதை, ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான சம்பவங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அஜய் கார்த்திக்கு ஜோடியாகத் தீபா பாலு மிகவும் துடிப்பான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குநர் A. வெங்கடேஷ், மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர், பாலஹாசன், ரமேஷ் திலக், மூணார் ரமேஷ், ஜெய் கிருஷ்ணா, வாழை ஜானகி, மெட்ராஸ் ரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் மொத்தக் காட்சிகளில் சுமார் 70 சதவீதம் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டே நகர்கிறது. இதற்காக, சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்டமான காவல் நிலைய அரங்கம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு, தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காட்சிகள் இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் அமையும் வகையில் வலுவான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.