த.வெ.க. தலைவர், நடிகர் விஜய்யின் உதவியாளருக்கு ரூ.50,000 உதவி!

விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளரும், விஜய்யின் மேலாளருமான, பிரபல பத்திரிகையாளருமான பி.டி செல்வகுமார், முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். திமுகவில், அவருக்கு ‘மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர்’ பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திரையுலகினர் அவருக்கு பாராட்டு விழா நடத்தினர். அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது..,

முரளி ராம நாராயணன் (தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ) பேசியதாவது..,

தேனாண்டாள் பிலிம்ஸ் க்கும் எனது தந்தை ராம நாராயணனுக்கும் மிகவும் வேண்டியவர் பல படங்கள் வெளிவர கடினமாக உழைத்தவர் பி.டி செல்வகுமார். இவர் கடின உழைப்பாளி மட்டுமல்ல பொறுமையாக அன்பினால் எதையும் சாதிக்க கூடியவர். அவரை ஃபாலோ பண்ணு என்று விஜய்யிடம் கூறி யி ருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். விஜயின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணம் என்று எனது தந்தையும் கருமாரி கந்தசாமியும் சொல்லுவார்கள்.. பல பிரச்சினைக்குரிய படங்களை இலகுவாக பேசி முடிப்பார்.. இவருக்கு தி.மு.கவில் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து மனமார பாராட்டுகிறேன். என்றார்.

தமிழ்குமரன் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் சங்கத் துணைத் தலைவரும் லைக்கா நிறுவனத்தின் சி.இ.ஓ-மான தமிழ் குமரன் பேசும் போது..,

பி.டி செல்வகுமார் சாருடன் 15 ஆண்டுகால நட்பு எனக்கு உண்டு.. பெரிய வியூக வகுப்பாளர் விஜய் போன்ற ஒரு நடிகரை உச்சத்துக்கு கொண்டுவர போராடியவர் பொறுமையும் பணிவும் தான் அவரது பலம்.. நான் தயாரித்த என்றென்றும் புன்னகை படத்திற்கு ஜீவா கால்ஷீட் தந்து பல உதவிகளை செய்தவர் அவர் அசாத்திய திறமை சாதுர்யமும் பல படங்கள் வெளிவர உதவியது… அவர் கலப்பை மக்கள் இயக்கம் மூலம் அரசு பள்ளிகளுக்கு 25 கலையரங்கங்கள் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.. இன்று அவருக்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் பொறுப்பு தி.மு.க வழங்கியுள்ளது இன்னும் அவருடைய உழைப்புக்கும் நேர்மைக்கும் பல பதவிகள் வரவேண்டும். என்றார்.

சோழா பொன்னுரங்கம் பேசும்போது..,

– தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் சுறுசுறுப்பானவர் எந்த வேலையாக இருந்தாலும் முடியும் என்பர் அவரது பயணத்தில் எதுவும் நடக்க முடியாது என்று இல்லை பலருடைய வெற்றிக்கு ஏணியாக இருந்தவர். என்றார்.

நடிகர் உதயா  பேசும்போது..,

பிடி செல்வகுமார் நல்ல பண்பாளர் சினிமாவில் பல பிரச்சினைகளை ஊதி பெரிதாக்கி விடுவார்கள் ஆனால் அத்தனையும் பொசுக்கி சாதிப்பவர் அவர் விஜய் மட்டுமல்ல பல திரைப்படங்கள் வெளிவர உதவியவர் இரும்புத்திரை திரைப்படம் வெளிவர போராடி வெளிக்கொண்டு வந்ததை நான் அறிவேன் அவருக்கு தி.மு.க வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்தது சரியானதே இன்னும் பல அவரது சாதனைகள் தொடரனும். என்றார்.

இந்நிகழ்வில், பிடி.செல்வகுமார், 10 ஏழைப் பெண்களுக்கு தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கியும், நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வம் என்பவருக்கு 50,000 நிதி உதவியும் வழங்கி, படங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியும் கொடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.