‘பிரேக்ஃபாஸ்ட்’ – விமர்சனம்!

‘’பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ்” சார்பில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், வெளிவந்திருக்கும் திரைப்படம், பிரேக்ஃபாஸ்ட். இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், ஏ ஆர் காந்தி கிருஷ்ணா. இதில் ராணவ், ரோஸ்மின், அமிதா ரங்கநாத், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அர்ச்சனா, ரவி மரியா, c. ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார், இசையமைத்திருக்கிறார். எம்.வி.பன்னீர்செல்வம், ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

போதிய புரிதலின்றிப் பிரியும், இன்றைய இளம் தலைமுறையினரின் காதல் கல்யாணத்தையும், அதன் பிறகான விவாகரத்தையும் பேசியிருக்கிறது, பிரேக் ஃபாஸ்ட்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற பழமொழிக் கேற்றவாறு, செல்வந்தர் வீட்டுப்பெண்ணான ரோஸ்மின், வசதியற்ற  கிராமத்து இளஞனான ராணவ்வுடனான சில சந்திப்புகளிலேயே அவரிடம் காதல் கொள்கிறார். அதே வேகத்திலேயே ராணவ்வை கல்யாணமும் செய்து கொள்கிறார். ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடன் குடும்பம் நடத்தி வருகின்றனர். ராணவ்வின் பெற்றோர்களால், ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இருவருமே நிதானம் தவறுகின்றனர்.  அதனால், விவாகரத்தை நோக்கிச் செல்கிறது, இவர்களது காதல் கல்யாணம்.  இதன்பிறகு என்ன நடந்தது? என்பது தான், படத்தின் கதை.

படம் ஆரம்பித்த முதல் 15 – 20 நிமிட, கிருத்திக் மோகன் – அமிதா ரங்கநாத் சம்பந்த்தப்பட்ட காட்சிகள், இப்போதே கிளம்பிவிடலாமா? என எண்ணத்தோன்ற வைத்துவிடுகிறது. அதன் பிறகு பரவாயில்லை. ராணவ் – ரோஸ்மின் சம்பந்தப்பட்ட மோதல், காதல், கல்யாணம் என சற்றே ரசிக்கும்படியாக காட்சிகள் செல்கிறது. முதல் பாதியை விட , இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. சில திருப்பங்களும் அடடே! சொல்ல வைக்கிறது. ருந்தாலும் அவ்வப்போது சலிப்பு ஏற்படுகிறது.

சாந்தனு கதாபாத்திரத்தில், அறிமுக நடிகர் ராணவ். அணைத்துக் காட்சிகளிலும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். குடும்ப பந்தங்களை விட முடியாமல் சிக்கித்தவிக்கும் காட்சிகளிலும், பணகார மனைவியின் அகங்காரத்தையும், அட்டகாசத்தையும் பொறுத்துப் போகும் காட்சிகளிலும் அதற்கேற்ற நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜான்வி கதாபாத்திரத்தில், அறிமுக நாயகி ரோஸ்மின். அவர் நடிப்பதற்கு ஏராளமான காட்சிகள். அதை சரியாக பயன் படுத்திக்கொண்டுள்ளார். அனைத்துக் காட்சிகளிலுமே குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளாமரோடு, சென்டிமென்ட் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

கிருத்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடியின் நடிப்பு அதீதமாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிக்கும்படியும் இல்லை. சம்பத் ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, ரவிமரியா, c. ரங்கநாதன் ஆகியோர் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.

அர்ச்சனா – c. ரங்கநாதன் சமபந்தப்பட்ட எரிச்சலூட்டும்படியான காட்சி அமைப்பு, படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.

எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு, ரசிக்கும்படி இருக்கிறது.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசை, ஏமாற்றம் அளிக்கிறது. பின்னணி இஅசை படத்திற்கு பலவீனமாக மைந்து விட்டது. ‘இதயம் துடிக்கிறதே’ பாடல் மீண்டும், மீண்டும் கேட்கும்படி இருக்கிறது.

இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, தெலுங்கு – தமிழ் இரண்டு ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டார்!