‘பெத்தி’ – விமர்சனம்!

விருத்தி சினிமாஸ் தயாரித்து, புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘பெத்தி’. இதில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ரவி கிஷன், திவ்யேந்து சர்மா, ஜெகபதிபாபு, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1980- 90 களில் கதை நிகழ்கிறது. அடிப்படை போக்கு வரத்து வசதிகள் இல்லாத, ரேசன் கார்டு இல்லாத அதாவது அரசின் பார்வையில் இல்லாத ஒரு மலை குக்கிராமம். அடிவாரத்தில் இருந்து இவர்களது இருப்பிடத்திற்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது. இவர்களது கிராமத்திலிருந்து சற்று தொலைவில் ரயில் தண்டவாளம் இருக்கிறது அந்த வழியாக செல்லும் ரயில் இவர்களது கிராமத்தில் நின்று சென்றால், அரை மணி நேரத்தில் இவர்களது கிராமத்திற்கு சென்று விடலாம். இங்கு ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும். என்று அந்த ஊர் பெரியவர் பல முயற்சிகள் எடுத்து தோற்றுப்போகிறார். அதன் பிறகு அந்த கிராமத்தில் வசித்து வரும், நாயகன் ராம் சரண், மல்யுத்தப் போட்டியின் மூலம் அதை செயல்படுத்த முயற்சிக்கிறார். அதுவும் தோற்றுப்போக, ஒரு விபரீதமான முயற்சியை கையில் எடுக்கிறார். அது என்ன? அவர்களது கிராமத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டதா? என்பது தான், ‘பெத்தி’. திரைப்படத்தின் கதை.

ராம் சரண், பழங்குடி இளைஞராக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரராக, மல்யுத்த வீரராக, ஓட்டப்பந்தய வீரராகவும் அதற்கேற்றபடி தனது உடற்கட்டை உருவாக்கி சிறப்பாக நடித்திருக்கிறார். பாடல்களில் மின்னல் வேக நடனத்தால் அனைவரையும் ஈர்த்து விடுகிறார். ஸ்ருதி ஹாசனுடன் ஆடும் பாடல், அவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.

ஜான்வி கபூர், தனது இளமையையும், வனப்பையும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார். ஆனால், திரைக்கதையில் இவரது பகுதி எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை.
ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் துள்ளலாக இருக்கின்றன. பின்னணி இசை, பக்க கமர்ஷியல் ஐட்டமாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவில், மல்யுத்தப் போட்டி நடக்கும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு த்ரில் கொடுக்கிறது
மல்யுத்தப் பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சிவ ராஜ்குமார். தனது கம்பீரமான நடிப்பின் மூலம் காட்சிகளுக்கு பலம் கொடுக்கிறார்.

ஜெகபதிபாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி ஆகியோரும் சிறப்பான முறையில் திரைக்கதைக்கு பங்களித்துள்ளனர்.

ஒரு சில குறைகளை தவிர்த்து, சுமார் 3 மணி நேரம் ஓடும் டத்தின் நீளத்தை குறைத்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

பெத்தி – வெற்றி வீரன்!