கட்டா குஸ்தி 2  – விமர்சனம்!

2022-ல தியேட்டரை அதிர வச்ச ‘கட்டா குஸ்தி’ டீம், இப்போ பார்ட் 2-வோட தியேட்டருக்கு வந்திருக்காங்க. முதல் பாகத்துல கல்யாணத்துக்கு முன்னாடி அடிச்சுகிட்ட வீராவும் கீர்த்தியும், இந்த முறை கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பண்றாங்க? வாங்க பார்ப்போம்!

என்னப்பா கதை? (Plot Lines)குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நம்ம ‘குஸ்தி குயின்’ கீர்த்திக்கு (ஐஸ்வர்யா லட்சுமி) ஒரு தயக்கம். இனிமே நம்மளால விளையாட முடியுமோ இல்லையோன்னு ஃபீல் பண்றாங்க. ஆனா, நம்ம வீரா (விஷ்ணு விஷால்) சும்மா இருப்பாரா? “உன்னால முடியும்”னு தைரியம் தர்றது மட்டுமில்லாம, வைஃபோட லட்சியத்துக்காக வீட்டைப் பார்த்துக்கிற ‘ஹவுஸ் ஹஸ்பண்டா’ ப்ரொமோஷன் வாங்கிடுறாரு.

கீர்த்தியும் நேஷனல் மேட்ச்சுக்கு வெறியா ரெடி ஆகிட்டு இருக்காங்க. ஆனா, திடீர்னு அவங்க பொண்ணு ஸ்கூல்ல சரியா படிக்கலன்னு கம்ப்ளைன்ட் வருது. “அப்பா குடுக்குற செல்லம்தான் இதுக்கெல்லாம் காரணம்”னு கோவப்படுற கீர்த்தி, மகளை ஸ்ட்ரிக்ட்டா வளர்க்க ஆரம்பிச்சு, அவளையும் குஸ்தி பிளேயர் ஆக்க ட்ரை பண்றாங்க. இதுல புருஷன்-பொண்டாட்டிக்கு நடுவுல ‘ஈகோ’ வெடிக்குது. தாயோட கண்டிப்பும் தகப்பனோட பாசமும் மோதிக்கிற இந்த குஸ்தி, கடைசியில டிவோர்ஸ் வரைக்கும் போகுது! அப்புறம் என்ன ஆச்சு? வீரா தன் குடும்பத்தை எப்பிடி ஒண்ணா சேர்த்தாருன்றதுதான் மீதிக்கதை.

வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜ் எதுவுமே இல்லாம, மனைவியோட வெற்றிக்கு பின்னாடி நிக்கிற ஒரு சூப்பர் கணவனா விஷ்ணு விஷால் செம எதார்த்தமா நடிச்சிருக்காரு. சமையல் பண்றது, குழந்தைய பாத்துக்கிறதுன்னு ஒரு பெர்ஃபெக்ட் ஹஸ்பண்டா லேடீஸ் ஆடியன்ஸ் மனசை அள்ளுறாரு. அதே சமயம், ஆக்சன் சீன்ஸ்லயும், ‘அப்படி போடு’ பாட்டுக்கு டீச்சரோட போடுற குத்து டான்ஸ்லயும் தியேட்டரை விசில் அடிக்க வைக்கிறாரு.

படத்தோட ஒட்டுமொத்த வெயிட்டையும் தன் தோள்ல தாங்கியிருக்காங்க ஐஸ்வர்யா லட்சுமி. குஸ்தி ரிங்குக்குள்ள அவங்க காட்டுற ஆக்ரோஷம் வேற லெவல்! அதே சமயம், ‘சம்பவக்காரி’ பாட்டுல அவங்களோட ரொமான்டிக் டான்ஸ் மூவ்ஸ் செம கியூட். குறிப்பா, சூழ்நிலை காரணமா புருஷனையே ரிங்குக்குள்ள எதிர்த்து நிக்கிறப்போ, ஒரு வைஃபா கோவத்தையும், ஒரு பிளேயரா வெறியையும் மிக்ஸ் பண்ணி அவங்க குடுக்குற எக்ஸ்பிரஷன்ஸ் தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது.

மோக்ஷா,  முனிஷ்காந்த், காளி வெங்கட், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன் எல்லாரும் சேர்ந்து ஒன்-லைனர்ஸ் மூலமாவும், டைமிங் காமெடி மூலமாவும் படம் முழுக்க தியேட்டரை கலகலப்பா வச்சிருக்காங்க.

படத்தோட பாடல்களும் பின்னணி இசையும் கமர்ஷியல் எண்டர்டெய்னருக்கு பெரிய பிளஸ். ‘அப்படி போடு’, ‘சம்பவக்காரி’ ரெண்டுமே தியேட்டர் மெட்டீரியல் சாங்ஸ்! ஒளிப்பதிவை பொறுத்தவரை கிராமத்து அழகையும், வீட்டிற்குள் நடக்கும் எமோஷனல் சண்டைகளையும் அழகா காட்டியிருக்காங்க. முக்கியமா, அந்த குஸ்தி சண்டை காட்சிகளை கேமரால விறுவிறுப்பா கொண்டு வந்த விதம் சூப்பர்.

‘கட்டா குஸ்தி 2’ – சிரிச்சு மகிழ ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெய்னர்!