‘அமீகோ கேரேஜ்’ –  விமர்சனம்!

“கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற பொன்மொழியின் விரிவாக்கமே, ‘அமீகோ கேரேஜ்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

மகிழ்ச்சியான, நடுத்தரமான குடும்பத்தில் வாழ்ந்து வரும், ‘அமீகோ கேரேஜ்’ படத்தின் நாயகன் மாஸ்டர் மகேந்திரன், ஒரு சிறிய பிரச்சனைக்கு தீர்வு காணச்சென்று, தனது மொத்த  வாழ்க்கையையும் தொலைத்து விட்டு நிற்பது தான், ’அமீகோ கேரேஜ்’.

‘அமீகோ கேரேஜ்’ படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், பள்ளி, கல்லூரி, பெரிய தாதா என, பல பரிமாணங்களில் தன்னை முழுமையாக நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். தனது நடிப்பின் மூலம் அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஆதிரா, வழக்கமான ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதற்கு என்ன வாய்ப்பு தரப்படுமோ, அதுவே  இவருக்கும் கிடைத்திருக்கிறது. வருக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை சரியாக செய்திருக்கிறார்.

அமீகோ கேரேஜின் உரிமையாளராகவும், போதைப்பொருள் விற்பவராகவும் நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர், தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

மற்றபடி, வில்லன்களாக நடித்திருக்கும் தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இவர்களோடு மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் குறிப்பிடும் படி நடித்துள்ளனர்.

விஜய்குமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் படத்திற்கு  பலம் சேர்த்திருக்கிறது.

வழக்கமான ஆக்‌ஷன் கதையை, வேகமாக , சற்றே வித்தியாசமான முறையினில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்.

‘அமீகோ கேரேஜ்’ – குறைகளுடன் கூடிய வழக்கமான ஆக்‌ஷன் படம்!