‘ஒற்றைப் பனைமரம்’ – விமர்சனம்!

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, சிங்கள பேரினவாத இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான, பாகுபாடு மற்றும் வன்முறை காரணமாக இலங்கையில் உள்நாட்டு போர் உருவானது. தமிழர்கள் பல குழுக்களாக, சிங்கள பேரினவாத அரசினை எதிர்த்து ஆயுதமேந்தி போரடினர். நாளடைவில் பல போராட்டக்குழுக்கள் செயலிழந்தன. ஆனால் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டும் தொடர்ந்து சிங்கள அரசினை எதிர்த்து வந்தது. இதை முடிவுக்கு கொண்டுவர, மேற்கத்திய நாடுகள் ஒன்று சேர்ந்து மே 18 ஆம் தேதி 2009 ஆம் வருடம் தமிழ் தேசியத்தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்களப்பேரினவாத அரசு அறிவித்தது. உள்நாட்டுப்போர் முடிவுற்றது.

இறுதிப் போருக்கு பிறகான மக்களின் நிலை பற்றி ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தின் மூலம், சில கற்பனை கலந்து இயக்கியிருக்கிறார், இயக்குநர் புதியவன் ராசய்யா.

போருக்கு பின் தற்கொலை செய்ய முயற்சிக்கும் போராளி நவயுகாவை காப்பாற்றுகிறார். மேலும் பாதுகாப்பின்றி இருக்கும் தமிழ்ப்பெண்களை ஒன்றிணைத்து ஒரு அமைப்பின் மூலம் பாதுகாப்பு கிடைக்க முயற்சிக்கிறார். அவரது அந்த முயற்சி என்ன ஆனது? போருக்கு பின், போராளிகளின் வாழ்க்கை, பொது மக்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே ஒற்றைப் பனை மரத்தின் கதை!

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன் படத்தினை இயக்கியிருக்கும், இயக்குநர் புதியவன் ராசய்யா. ஒரு சார்பாக காட்சிப்படுத்தியிருப்பது அவலம். இறுதிப் போருக்கு பிறகு போராளிகளின் வாழ்க்கை குறித்து அவர் கட்டமைத்திருக்கும் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கும் போராளிகளுக்கமான பிரச்சனையை தொட்டும் தொடாமல் காட்சிப்படுத்தியிருப்பது, இயக்குநரின் ஒரு சார்பினை வெளிப்படுத்தியிருக்கிறது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், போராளிகளின் தியாகத்தினை கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் இலங்கை ஒளிப்பதிவாளர் மஹிந்தே அபிசிண்டே, மற்றும் சி.ஜெ.ராஜ்குமார் ஆகியோரது ஒளிப்பதிவு பரவாயில்லை!

அஷ்வ மித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலவீனம்.

மொத்தத்தில், ‘ஒற்றைப் பனை மரம்’ இனவாத சிங்கள அரசுக்கான பிரச்சாரப் படமாக இருக்கிறது!