‘பயாஸ்கோப்’ –  விமர்சனம்!

சங்ககிரி ராச்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ். எம். மாணிக்கம் , இந்திராணி, எஸ் எம் செந்தில் குமார், சிவரத்தினம் , பெரியசாமி, மோகனப்பிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்க, சங்ககிரி ராச்குமார் எழுதி, இயக்கி உள்ளார். இசையமைத்திருக்கிறார், தாஜ் நூர். சந்திரா சூரியன், பிரபு, பெரியசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

சங்ககிரி ராச்குமார் இயக்கிய முதல் படமான ‘வெங்காயம்’, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. வெங்காயம் திரைப்படத்தினை, விமர்சன ரீதியாக பாராட்டினர். ஆனால், வியாபார ரீதியாக  அது தோல்வியடைந்தது. ‘வெங்காயம்’ திரைப்படம் உருவானது எப்படி? என்பதில் தொடங்கி, திரையுலகிற்கு சிறிதும் பரிச்சயமில்லாதவர்களை கொண்டு, வீடு, நிலம், ஆடு, மாடு என அனைத்தையும் விற்று குடும்பத்தினரை நிர்கதியாக நிற்க வைத்தது முதல் அனைத்து நிகழ்வுகளையும், கலகலப்பாகவும், நெகிழ்ச்சியாகவும் இயக்குநர் சங்ககிரி ராச்குமார் சொல்வது தான் ‘பயாஸ்கோப்’.

திரையுலகிற்கு சிறிதும் பரிச்சயமில்லாத கிராமத்து மனிதர்களை வைத்துக் கொண்டு சுவாரசியத்துடன் கொடுத்த இயக்குநர் சங்ககிரி ராச்குமாரை பாராட்டலாம். அதோடு

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராச்குமார், கிராமத்து பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி உள்ளிட்டவர்கள் தொடங்கி, அவருக்கு

அப்பாவாக நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் ரஞ்சித், ஹீரோயினாக நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே கதாபாத்திரங்களாகவே உலா வருகின்றனர்.

சேரனும், சத்யராஜூம் படத்திற்கு அளித்த முக்கிய பங்கு சிறப்பானது.

ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் ஒளிப்பதிவு கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. இசையமைப்பாளர் தாஜ்நூருடை இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் தென்படும் குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால், பரவாயில்லை படமாகத்தான் பயாஸ்கோப் இருக்கிறது.

பயாஸ்கோப், கதையாக எழுதி இயக்கியிருக்கும் சங்ககிரி ராச்குமார், படம் எடுத்த அனுபவத்தையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்ற புதிய பாதையை உருவாக்கியிருக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.

தனது முதல் படத்தின் காட்சிகளையும்அதற்கான விழா தொடர்பான காட்சிகளையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியுள்ளார். இப்படியும் படம் எடுக்கலாம் என்று பலருக்கும் வழிகாட்டி உள்ளார்.முதல் பாதி சற்றே சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் நெகிழ வைக்கும் சம்பவங்களால் நிறைவளித்து விட்டார்.அவரது அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.