‘கோப்ரா’ – விமர்சனம்!

தமிழ்சினிமாவில் நடிக்கத்தெரிந்த நடிகர்களில் முக்கியமானவர் சீயான் விக்ரம். சுமார் 3 வருடங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் கோப்ரா. இந்தப்படம் மிகப்பெரிய ஹைப்புக்கு நடுவில் வெளியாகி இருக்கிறது. அதற்கு காரணம், சீயான் விக்ரம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பவர் என்பதாலும், தென்னிந்தியா முழுவதும் முழுவீச்சில் அவர் படத்தினை கொண்டு சேர்க்கும் புரொமோஷன் டூர்களை மேற்கொண்டதுமே ஆகும்.

விக்ரம், ஶ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, இர்ஃபான் பதான், ரோஷன்மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். கோப்ரா எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

உலகையே உற்று பார்க்கும் விதத்தில், ஐரோப்பா கண்டத்தில் ஒரு கொலை. ஆசியகண்டத்தில் ஒரு கொலை. இந்த கொலைகளுக்காக காரணம் தேடி கொலையாளியை கண்டுபிடிக்க, இர்ஃபான் பதான் தலைமையிலான சர்வதேச பொலீஸ் குழு தீவிரமான முயற்சியில் இறங்குகிறது. கொலையாளியை அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பது தான் கோப்ரா படத்தின் கதை.

மாஸ்.. மாஸ்…, விக்ரம் என்றாலே மாஸ் தான்! அந்த மாஸூக்காகவே படத்தை பார்க்கலாம்! வழக்கம்போல் சீயான் விக்ரம், நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை! வித வித மான கெட்டப்புகளில், வெவ்வேறு மாடுலேஷன்களில் வசனம் பேசி அசத்துகிறார். ஃபைட் சீன்களில் அடித்து தூள் கிளப்புகிறார். அதே போல் பாடல் காட்சியிலும்.  தும்பி.. தும்பி.. பாடல், மறுபடியும் மறுமடியும் பார்க்க, கேட்க தூண்டுகிற பாடல். ஒளிப்பதிவு,

ஶ்ரீநிதி ஷெட்டி, தனக்கு கிடைத்த இடங்களில் நடித்து ஸ்கோர் செய்ய முயற்சி செய்து இருக்கிறார். அவரைப்போலவே மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி இருவரும் நடித்து இருக்கிறார்கள். கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக இர்ஃபான் பதானும், கார்ப்பரேட் டானாக ரோஷன் மேத்யூ நடித்துள்ளனர்.

முதல் பாதி அப்படி.. இப்படி., இருந்தாலும் போனது தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி சோர்வினை தருகிறது. அதற்கு காரணம் படத்தின் நீளம். அஜய் ஞானமுத்துவின் திரைக்கதை டிவிஸ்டுகள், தெளிவற்ற திரைக்கதையால் தடுமாறி இருக்கிறது. அதை தனது வசீகரத்தால் முடிந்த அளவு சரி செய்கிறார், சீயான் விக்ரம்.

அம்மா சென்டிமென்ட் காட்சிகள் எடுபடவில்லை!

சீயான் விக்ரமின் நடிப்பும், விதவிதமான லெக்கேஷன்களும் கண்களுக்கு விருந்து.

கோப்ரா சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கான படம்!