காலேஜ் ரோடு – விமர்சனம்!

MP எண்டர்டெயின்மெண்ட்  சார்பில் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், காலேஜ் ரோடு. இதில் லிங்கேஷ், மோனிகா, ஆனந்த் நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு லக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுதி, இயக்கியிருக்கிறார், இயக்குநர் ஜெய் அமர் சிங்.

சென்னையின் மிகப்பெரிய  பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் புதிய ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்நிலையில் நகரின் முக்கியமான வங்கிகள் கொள்ளையடிக்கப் படுகின்றன.  கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீஸ் முடுக்கி விடப்படுகிறது. இதன் பிறகு அதிரடி திடீர் திருப்பங்கள் தான் காலேஜ் ரோடு படத்தின் கதை.

லிங்கேஷ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். தூக்கு மாட்டி இறந்து போகும் நண்பனை நினைத்து கதறும் காட்சியில் கண்ணீரை வரவழைக்கிறார். அவரது கிராமத்து நண்பர்களாக நடித்தவர்களும், கல்லூரி நண்பர்களாக நடித்தவர்களும் சிறப்பாகவே நடித்துள்ளனர். காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பல காட்சிகளில் கடித்தாலும், சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது.

இசை அமைப்பாளர் ஆப்ரோவின் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது

சமுதாயத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக இருந்து வருவது ஏழை மாணவர்களுக்கான கல்வி. தகுதியுள்ள மாணவர்களுக்கு அது கிடைத்தே ஆகவேண்டும் என்ற கருத்தினை ஆழமாகவும், அழுத்தத்துடனும் பதிவு செய்து பாராட்டு பெறுகிறார், இயக்குநர் ஜெய் அமர் சிங்.

காலேஜ் ரோடு – பார்க்க வேண்டிய படம்