ஓ மை கோஸ்ட் –  விமர்சனம்!

உலகின் டாப் 10 நீலப்பட நடிகைகளில் ஒருவராக இருக்கும் சன்னி லியோன் நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம் ஓ மை கோஸ்ட். அவருடன் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, ரமேஷ் திலக், அர்ஜூனன், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நண்பர்கள் சதீஷ், ரமேஷ் திலக் இருவரும் நடு இரவில் கெட்ட சக்திகளை வெளிவரச் செய்யும் பூஜையினை தடுத்து விடுகின்றனர். இதனால் கோபமடையும் ஒரு ஆவி சதீஷ், ரமேஷ் திலக் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. அந்த நேரத்தில் அங்கு வரும் சதீஷின் காதலி தர்ஷா குப்தாவின் உடம்புக்குள் அந்த ஆவி புகுந்து கொண்டு தன்னை அனகொண்டாபுரம்  என்ற ஊருக்கு அழைத்து செல்ல சொல்ல வற்புறுத்துகிறது.

சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தாவுடன் அனகொண்டாபுரத்தில் உள்ள பாழடைந்த  அரண்மனைக்கு செல்கின்றனர். அங்கே பழிவாங்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சன்னி லியோனின் ஆவியை இவர்கள் விடுவித்து விடுகின்றனர். இதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ஓ மை கோஸ்ட் படத்தின் கதை.

ராணி மாயசேனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சன்னி லியோன்,  கவர்ச்சி உடையில் கம்பீரமான அழகில் வலம் வருகிறார். இருந்தாலும் கூடுதல் கவர்ச்சியில் அவரை பார்க்க வந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்!

நாயகனாக நடித்திருக்கும் சதீஷூம் ஏமாற்றி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் தர்ஷா குப்தா பரவாயில்லை.

யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார் பெரிதாக சொல்வதற்கில்லை.

ரமேஷ் திலக், அர்ஜூனன், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை.

சன்னிலியோனை முன்னிலைப்படுத்தி ஒரு கிளுகிளுப்பான காமெடிப்படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.யுவன்.

ஆனால், அதற்கேற்ற திரைக்கதையையும், காட்சியமைப்பையும் கொடுக்க தவறிவிட்டார்.

தொழில்நுட்ப பணிகளில் இருந்த நேர்த்தி திரைக்கதையில் இல்லாததால்  ‘ஓ மை கோஸ்ட்’ வேஸ்ட்டாகியிருக்கிறது.