வெங்கட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில், ‘டைகர்’ வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் படம், தண்டுபாளையம். இதில் டைகர் வெங்கட், காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். அவருடன் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்க, இவர்களுடன் முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ், ரவிசங்கர், மக்ரதேஷ் பாண்டே , ரவிகாலே, ராயல் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
1980 களில், பவாரியா கும்பல் போல், ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்தது. இந்த கும்பல் மீது, 390 கொள்ளை வழக்குகள், 108 கொலை வழக்குகள், 90 கொடூர கற்பழிப்பு வழக்குகள் இருந்தன. படிப்பறிவே இல்லாத இந்த கொடூர கும்பலின் கொடூர குற்றப் பின்னணியை மையமாக கொண்டு வெளியாகியிருக்கும் படமே தண்டுபாளையம்.
கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில், பூஜா காந்தி தலைமையில் ஒரு கும்பல் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை, பணத்தினை கொள்ளை அடித்து அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்கிறது. இதில், சில பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்ய்யப்படுகின்றனர்.
போலீசுக்கு மிகவும் சவாலாக இருக்கும் இந்த பல்லை கும்பலை பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்படுகிறது. அந்த தனிப்படையின் அதிகாரி டைகர் வெங்கட் அந்த குழுவை மடக்கிப்பிடித்து, அணைவரையும் என்கவுன்டர் செய்கிறார். இதற்கு பழி வாங்க கொல்லப்பட்டவர்களின் உறவு கும்பல், சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் தலைமையில் போலீஸ் அதிகாரி டைகர் வெங்கட்டை தீர்த்து கட்டுகிறது.
ஒருசில காட்சிகளில் மட்டும் வருகிற சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இருவரும் டெரராக வலம் வருகிறார்கள். படம் முழுவதும் ரத்தக்களறியாக இருக்கிறது. கற்பழிப்பு காட்சிகள் ஓவர்.
விழிப்புணர்வு படமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம். அதை சரியாக செய்யாமல் விட்டிருக்கிறார்கள்.
மோசமான குற்றப் பின்னணியினரைப் பற்றிய மோசமான படமாக்கம்!