விஜய் ஆண்டனிக்கும் ரியா சுமனுக்கும் ரயிலில் பயணிக்கும்போது காதல் ஏற்படுகிறது. இதன் மூலம், அடிக்கடி ரயில் பயணத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள். இவர்கள் பயணிக்கும் ரயிலில், அமைச்சரின் பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்வதை அறியும் ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. இந்த கும்பலை பிடிக்க போலீஸ் அதிகாரி கௌதம் மேனனின் ஆட்களும், அமைச்சரின் ஆட்களும், கும்பலை சுற்றி வலைக்க. அப்போது நடக்கும் துப்பாக்கிச் சூட்டில், காதலியுடன் பயணிக்கும் விஜய் ஆண்டனி காயமடைகிறார். அதன் பிறகு நடக்கும் விசாரணையில் என்ன நடந்தது. என்பது தான் ஹிட்லர் படத்தின் கதை.
அரதப்பழசான கதை. லாஜிக்குகளை மீறும் திரைக்கதை. விஜய் ஆண்டனிக்கு பொருந்தாத மேக்கப். சமீபகாலமாக விஜய் ஆன்டனியின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் இந்தப்படமும்! இருந்தும் தன்னால் முடிந்த வரை நடித்திருக்கிறார், விஜய் ஆண்டனி.
நாயகியாக ரியா சுமன் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி. காவல்துறை அதிகாரியாக கெளதம் மேனன், திரைக்கதைக்கு உதவியிருக்கிறார்.
தமிழ்சினிமாவின் மாமுல் வில்லனாக சரண்ராஜ். அவரது தம்பியாக நடித்திருக்கும் தமிழ்.
ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நவீன் குமாரின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார்!
ஓட்டுக்குப்பணம், அதை சுற்றி நடக்கும் அரசியல் அடாவடித்தனங்களை கமர்ஷியலாக சொல்ல முற்பட்டு தோற்றுப்போயிருக்கிறார், இயக்குநர் தனா.
‘ஹிட்லர்’ – அப்படின்னா யாருன்னு கேட்க வச்சுட்டாங்க!