‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

வழக்கமா வர்ற லவ் ஸ்டோரிஸ்ல பொண்ணுங்களுக்காகப் பசங்க உருகி உருகி லவ் பண்றதையும், அவங்களுக்காகக் கடன் வாங்குறதையும் பார்த்திருப்போம். ஆனா, “அதே கஷ்டத்தை நீயும் கொஞ்சம் அனுபவிச்சுப் பாரேன்”னு ஹீரோயினுக்கு ஹீரோ சவால் விட்டா எப்படி இருக்கும்? அதுதான் இந்த வார ரிலீஸான ‘லவ் ஓ லவ்’ படத்தோட ஒன்லைன்!

மாசம் பொறந்தா வாங்குற மொத்த சம்பளத்தையும் அப்பாகிட்ட கொடுத்துட்டு, தன் செலவுக்குக் கூட காசு கேட்காத ஒரு ‘தங்கமான வாலிபன்’ தான் நம்ம ஹீரோ பவிஷ். ஆனா, அப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷனையும் இந்த காதல் சும்மா விடல. லவ் பண்ண ஆரம்பிச்சதும் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு, ஏகப்பட்ட கடனாளியாகி, கடைசியில வாழ்வாதாரமான வேலையையும் இழந்து நடுத்தெருவுல நிக்கிறாரு ஹீரோ.

இதுக்கெல்லாம் காரணம் ஹீரோயின் நாக துர்காவோட ஆடம்பர செலவுகளும், பொறுப்பில்லாத காதலும் தான். இதனால ஒட்டுமொத்தமா உருக்குலைஞ்சு போற பவிஷ், பிரேக்-அப் பண்ணலாம்னு முடிவு பண்றாரு. ஆனா ஹீரோயினோ, “நீ தான் என் புருஷன், உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்”னு அடம் புடிக்கிறாங்க.

இதுக்கு எண்ட் கார்டு போட ஹீரோ ஒரு அதிரடி கண்டிஷன் போடுறாரு. “நாலு வருஷமா ஒரு பாய்பிரண்டா நான் உனக்காக என்னெல்லாம் பண்ணுனேனோ, அதை நீ வெறும் நாலே மாசம் எனக்காகப் பண்ணிக் காட்டணும். ஜெயிச்சா கல்யாணம், தோத்தா டாட்டா பை-பை” அப்படின்னு சவால் விடுறாரு. இந்த சவாலை ஏத்துக்கிட்டு, பாய்ஸ் உலகத்துக்குள் என்ட்ரி கொடுக்குறாங்க ஹீரோயின். அவங்க அந்த நாலு மாசத்தை எப்படி சமாளிச்சாங்க? ஹீரோவை கைப்பிடிச்சாங்களா இல்லையா? என்பதை செம கலகலப்பா சொல்லியிருக்காங்க.

ஃபர்ஸ்ட் ஃபிலிம்லயே டான்ஸ் மற்றும் ஆக்டிங்ல அசத்துன பவிஷுக்கு இது செகண்ட் மூவி. அதனால மனுஷன் செம மெச்சூர்டா நடிச்சிருக்காரு. சில எமோஷனல் சீன்ஸ்ல பார்க்க அப்படியே தனுஷ் மாதிரியே இருக்காரு. டான்ஸ், ஃபைட், லவ்வர் மேல காட்டுற கோபம்னு எல்லாத்துலயும் ஓவர் ஆக்டிங் இல்லாம கச்சிதமா பண்ணியிருக்காரு.

புதுமுக நடிகையான நாக துர்கா பக்கத்து வீட்டுப் பொண்ணு லுக்ல வராங்க. ஆனா, ஆடியன்ஸை டக்குனு அட்ராக்ட் பண்ண வைக்கிற அந்த ஹீரோயின் மெட்டீரியல் இவங்ககிட்ட கொஞ்சம் மிஸ் ஆகுது. டான்ஸ் ஆடுறதுக்கும் இவருக்கு கதையில பெரிய ஸ்கோப் இல்லை.

ஹீரோவோட அப்பாவா வர்ற கே.எஸ்.ரவிகுமார், போலீஸா மிரட்டுற செல்வராகவன், அப்புறம் மகளிர் சங்க தலைவியா வர்ற வனிதா விஜயகுமார்னு இவங்க மூணு பேரும் தங்களோட எக்ஸ்பிரியன்ஸ் மூலமா படத்தோட வெயிட்டைக் கூட்டியிருக்காங்க!

படம் முழுக்க செம கலர்ஃபுல்லான விஷுவல்ஸ் மூலமா கண்களுக்குக் குளிர்ச்சி தந்திருக்காரு கேமராமேன் பி.ஜி.முத்தையா. படத்துல இருக்குற அந்த ஒரே ஒரு ஃபைட் சீன்ல, ஹீரோவை மண்ணுல உருள வச்சு ரொம்ப எதார்த்தமா காட்டியிருக்காரு. பாட்டு சீன்ஸ்ல மட்டும் செம கமர்ஷியல் லுக் குடுத்து கலக்கியிருக்காரு.

பாக்ஸன் மியூசிக்ல சாங்ஸ் எல்லாம் கேக்குறதுக்கு கமர்ஷியலா ஜாலியா இருந்தாலும், தியேட்டரை விட்டு வெளிய வந்ததும் மனசுல நிக்க மாட்டேங்குது. பிஜிஎம் (BGM) ஓகே ரகம்.

டைரக்டருக்குக் கதையை ஒன்-பை-ஒன்னா ஆர்டரா சொல்லத் தெரியலன்னாலும், எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் தகுந்த மாதிரி எடிட் பண்ணி காட்சிகளை ஆடியன்ஸ்க்குப் புரியுற மாதிரி ரொம்ப சிம்பிளா கொண்டு போய் சேர்த்திருக்காரு.

‘ரோமியோ ஜூலியட்’ படத்துல அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணுன மகேஷ் ராஜேந்திரனுக்கு, அந்தப் படத்தோட இன்ஸ்பிரேஷன் ரொம்பவே இருந்திருக்குன்றது நல்லாவே தெரியுது. ஆனா, அந்தப் பழைய படத்தோட சாயல் எங்கேயும் ஒட்டாத மாதிரி, ஆடியன்ஸ்க்கு பிடிச்ச கமர்ஷியல் பேக்கேஜா சீன்ஸை ரெடி பண்ணிருக்காரு.

லவ் ஸ்டார்ட் ஆகுறப்போ வர்ற அந்த கியூட்டான முமென்ட்ஸ், மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற ஃபீல் இதெல்லாம் ஆடியன்ஸ்க்கு பெருசா கனெக்ட் ஆகல.

லவ் ஓ லவ்  – பரவாயில்லை!