சபாநாயகன் – விமர்சனம்!

அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், சபாநாயகன். அறிமுக இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன், திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய மூவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். எப்படி இருக்கிறது, சபாநாயகன்?

குடிபோதையில், வாலண்டியராக வண்டி ஓட்டிக்கொண்டு போய் போலீஸிடம் சிக்குகிறார், அசோக் செல்வன். அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகும் வழியில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் மற்றும் கான்ஸ்டபிள் மயில்சாமியிடம், தன்னுடைய காதலையும், காதலிகளையும் சொல்கிறார். அப்படி அவர் என்ன சொன்னார், என்பதே சபாநாயகன் படத்தின் நகைச்சுவை காதல் கதை.

அசோக் செல்வன், மூன்றுவிதமான தோற்றங்களில் நடித்து ரசிக்க வைக்கிறார்.  பள்ளி படிக்கும்போது கார்த்திகா முரளிதரன் மீது காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி சௌத்ரி மீது காதல், அதன் பிறகு மேகா ஆகாஷ் மீது காதல் என அசோக் செல்வன் வாழ்க்கையில் நடந்த காதல்கள், சம்பவங்கள் அனைத்தும் ரசிக்கும் படியான காட்சிகள், நன்றாக படமாக்கப்பட்டிருக்கிறது 2 கே கிட்ஸ்களை எளிதில் கவர இயக்குனர் இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன், திரைக்கதை உத்தி சிறப்பு. இருந்தாலும் போதிய அலுத்தமின்றி காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்தின் மைனஸ்.

யுடியுபின் பிரபலங்களான அசோக்செல்வனின் நண்பர்களாக நடித்திருக்கும், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம் என அனைவருமே சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவும், லியோ ஜேம்ஸின் இசையும் படத்தின் பலம்.

எடிட்டர் கணேஷ் சிவா படத்தின் நீளத்தினை குறைத்திருக்கலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை.

மொத்தத்தில், ‘சபாநாயகன்’ 2கே கிட்ஸ்களுக்கானவன்!