‘96’ படத்தில் ‘காதலே காதலே’பாடலை பாடிய பாடகி காலமானார்!

பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. இவர் புகழ்பெற்ற இயக்குனர் ராஜிவ்மேனனின் தாயார். இவர் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் உண்டு.

பாடகி கல்யாணி மேனனின் இறுதி சடங்கு  இன்று பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறுகிறது.

கல்யாணி மேனன் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கல்யாணி மேனன் 1979 ஆம் ஆண்டு, இளையாராஜா இசையில் வெளியான ‘நல்லதொரு குடும்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘செவ்வானமே பொன் மேகமே’ பாடலை, பிஎஸ் சசிரேகாவுடன் இணைந்து பாடினார். ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்தப்பாடலை அடுத்து  ‘சுஜாதா’ படத்தில் இடம்பெற்ற ‘நீ வருவாய் என’ என்ற  சூப்பர் ஹிட் பாடலையும் பாடியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில், முத்து, அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா உட்பட பல படங்களில் பாடியிருக்கிறார்.

கல்யாணி மேனன் கடைசியாக  பாடிய பாடல், கோவிந்த் வசந்த் இசையமைப்பில் ‘96’ படத்தில் இடம்பெற்ற  ‘காதலே காதலே’என்ற பாடலாகும். இந்தப்படமும் இந்தப்பாடலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ளது. குறிப்பிடதக்கது.