திரையுலக பேய் கதைகளின் வரலாற்றிலேயே முற்றிலும் மாறுபட்ட படம், கனெக்ட். ஆமாம். வீடியோ காலின் மூலம் பேய் விரட்டுகிறார்கள். அது எப்படி சாத்தியம். என்பதை அலுத்தமில்லாத திரைக்கதையின் மூலம் விவரித்துள்ளார், இயக்குனர் அஸ்வின் சரவணன்.
கொரோனாவை பற்றி அதிகம் அறிந்திராத தொடக்க கால கட்டத்தின், ஊரடங்கின் போது மருத்துவரான நயன்தாராவின் கணவர் வினய் ராய், கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். பலரது உயிரினை காப்பாற்றிய அவரது உயிர் கொரோனாவால் பறிக்கப்படுகிறது. கணவனை இழந்த நிலையில் நயன்தாராவும் அவரது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பாவின் மீது அதிக அன்பு கொண்ட அவரது மகள் ‘ஓஜோ’ போர்டு மூலம் அவரது அப்பாவிடம் பேச முயற்சி செய்கிறார். அங்கே ஒரு விபரீதம் நடந்து, ஒரு கெட்ட ஆவியின் பிடிக்குள் சிக்குகிறார், நயன்தாராவின் மகள்.
இதனால் அந்த கெட்ட ஆவியிடம் இருந்து நயன்தாராவின் மகளை காப்பாற்ற கிறிஸ்தவ பாதரியார் அனுபம் கெர், வீடியோ கால் மூலமாக அந்த ஆவியை சத்யராஜ் மற்றும் நயன்தாராவின் உதவியுடன் விரட்டுகிறார்.
அனுபம் கெர், சத்யராஜ், நயன்தாரா, வினய்ராய் உள்ளிட்ட நன்கு பரிச்சயப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும், கட்சியமைக்கப்பட்ட விதத்தில் அவர்களால் சுவாரஷ்யத்தை ஏற்படுத்த முடியவில்லை! சில காட்சிகள் முழுமையற்றதாக இருக்கிறது. அமானுஷ்யமாக ஏற்படும் சில காட்சிகளில், நயன்தாரா எந்தவிதமான உணர்வையும் காட்டாமல் கடந்து செல்வது, படத்தின் மிகப்பெரும் பலவீனம்.
இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை, படத்தினை ஓரளவு தாங்கிப்பிடிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியும் பாராட்டப்பட வேண்டியவர்.
வீடியோ காலில் பேய்விரட்டும் வித்தியாசமான கதையை உருவாக்கிய இயக்குநர் அஸ்வின் சரவணன், அதற்கான திகிலூட்டும் காட்சிகளை உருவாக்கத் தவறி விட்டார்!
திகிலூட்டும் பேய்ப்படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு ‘கனெக்ட்’ஏமாற்றத்தையே தரும்!