கடத்தல் – விமர்சனம்!

D.நிர்மலா தேவி, P.N.P. கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் ‘கடத்தல்’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக M.R.தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன்,  R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜ்செல்வா , இசை – தனசீலன், பின்னணி இசை-M.ஸ்ரீகாந்த், பாடல்கள் – பாவலர் எழில்வாணன், இலக்கியன்,  சக்தி பெருமாள்.  படத்தொகுப்பு – A.L.ரமேஷ், சண்டை பயிற்சி இயக்கம் –  குங்ஃபூ சந்துரு, நடன இயக்கம் – ரோஷன் ரமணா, தயாரிப்பு மேற்பார்வை – மல்லியம்பட்டி  மாதவன். பத்திரிக்கை தொடர்பு –  மணவை புவன்,  நிழற்படம் – தஞ்சை ரமேஷ், டிஸைன்ஸ் – விக்னேஷ் செல்வன்,  இணை தயாரிப்பு – M.R. தாமோதரன்- ரமேஷ் விஜயசேகர், தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி, கதை, திரைக்கதை, வசனம் எழுத்து, இயக்கம் – சலங்கை துரை.

மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி பணத்திற்காக ஒரு குழந்தையை கடத்துகிறான். பனை மரத் தொழில் செய்து வரும் கதாநாயகன் எம்.ஆர்.தாமோதர், தன் நண்பனை பார்க்க ஓசூர் வருகிறார். அங்கே கடத்தப்பட்ட குழந்தை சித்ரவதை செய்யப்படுகிறது. இதனால், வெகுண்டு எழும் எம்.ஆர்.தாமோதர், கடத்தல் காரனை தாக்கி அவனிடமிருந்து குழந்தையை மீட்கிறார். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து ஒப்படைக்க முடிவு செய்கிறார். இநிலையில் தாமோதரை, போலீஸ் ஒரு பக்கமும், ரௌடிகள் ஒருபக்கமும், துரத்துகின்றனர். அவர், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பது தான் ‘கடத்தல்’  படத்தின் மீதிக்கதை.

பனை மரத்தொழில் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், அறிமுக நடிகர் எம்.ஆர்.தாமோதர், ஆக்‌ஷன் காட்சிகளில் தன் திறமையை நன்றாகவே வெளிப்படுத்துகிறார். படம் முழுவதும் வரும் அம்மா செண்டிமெண்ட் காட்சிகளில், முடிந்த வரை தன்னை, நிலை நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் சற்றே தடுமாற்றம்.

விதிஷா, ரியா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். வழக்கமான சினிமா கதாநாயகிகளுக்கான வேடம் தான். இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப நடித்துள்ளனர். குறை சொல்ல முடியாத நடிப்பு!

இவர்களுடன் அம்மாவாக சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன்,  ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம்,  க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் என அந்தந்த கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ராஜ் செல்வா, குளு குளு பொள்ளாச்சியை அழகாக படம்பிடித்துள்ளார். பனை மர காடுகள், செங்கல் சூளையில் அமைக்கப்பட்டிருக்கும் சண்டைகாட்சி, ஒளிப்பதிவால் பிரமாண்டமாக இருக்கிறது.

எம்.ஸ்ரீகாந்தின் இசையில் ஒரு பாடல் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

இயக்குநர் சலங்கை துரை, காலம் காலமாக பார்த்த, வழக்கமான கமர்ஷியல் படத்தினை, அம்மா செண்டிமென்ட் குழந்தை செண்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கிறார்.

சிங்கம்புலியின் காமெடிக்காட்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பினை வரவழைக்கிறது. அவரை இன்னும் கொஞ்சம் பயன் படுத்தியிருக்கலாம்.

மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், திரைக்கதை அதை சரி செய்கிறது.

மொத்தத்தில், ‘கடத்தல்’ மசாலா படப்பிரியர்களுக்கு மட்டும் பிடிக்கும்