Connect with us

World

அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது – மு.க.ஸ்டாலின்

Published

on

அண்டை நாடான இலங்கையில் சமீப நாட்களாக நடந்துவரும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

“மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதனைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது.

மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி – அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மாற்றி, வருகின்ற 14ஆம் தேதி புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல – அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல்! தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது. பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.

தனது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக கங்கணம் கட்டிக் கொண்டு “ஹிட்லர்” போல் செயல்பட்ட ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்ட போது மத்திய அரசு அமைதி காத்தது. ராஜபக்சேவும் – அதிபர் சிறிசேனாவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது மத்திய பாஜக அரசு.

மத்திய அரசின் இத்தகைய மவுனம் இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது. இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

Advertisement

India

விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்!

Published

on

By

‘தேமுதிக’ தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக, உடல் நலம் குன்றிய நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது.

தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக தொண்டர்களுக்கு, ‘தேமுதிக’ தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும், பூரண குணம் அடைந்தவுடன் தொண்டர்களை சந்திப்பாகவும் கூறியிருந்தார்.

அதனையடுத்து, இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி  காலை 9.50 மணிக்கு சென்னையில்  இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார்.

இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 8.15 மணியளவில் விஜயகாந்த் காரில் வந்து இறங்கினார். பின்னர் காரிலிருந்து வீல் சேர் மூலம் அவருடைய உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோர் விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

விஜயகாந்த்துடன் அவருடைய மகனும், நடிகருமான சண்முகபாண்டியனும் சென்றுள்ளார்.

முன்னதாக அங்கே திரண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நலம் பெற வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

 

Continue Reading

India

கடலில் மூழ்கும் இந்திய நகரங்கள்! – நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை!

Published

on

By

உலகில் நிகழ்ந்துவரும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக காலநிலையில் அதிர்ச்சி தரும் மாற்றங்கள் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஐ.நா., நிறுவனம் வெளியிட்டுள்ள ஐ.பி.சி.சி., அறிக்கையில் கூறியிருப்பதாவது…

‘சுற்றுச்சூழலுக்கு எதிரான மனித நடவடிக்கைகளால் அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். மேலும்  புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள் உருகி, கடல்நீர் மட்டம் உயரும்.

கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த விபரங்களில் குறிப்பாக, ‘2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் கடலுக்கடியில் 2.7 மீட்டர் அளவு ஆழத்தில் மூழ்கும்.

இதில், குஜராத், ஒடிசா, கல்கத்தா, மகாராஷ்டிரா,கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் நகரங்கள் உள்ளன.

குறிப்பாக சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட உலகின் வேறுபகுதிகளில் உள்ள நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம்’ என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Continue Reading

India

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த 15 அதிரடி உத்தரவுகள்!

Published

on

By

உலகரங்கில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்ற நாடான, அமெரிக்காவின் 46 வது அதிபராக ( ஜோசப். ராபினெட் பைடன் 78 ) நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்ற முதல் நாளிலேயே அவர் 15 முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு முன்னிருந்த அதிபர்கள் யாரும் இவ்வளவு உத்தரவுகளை பிறப்பித்தது இல்லை. ஜோ பைடனின் இந்த செயல். உலகத்தலைவர்களின் மத்தியில் தனிக்கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ‘கீஸ்டோன் எக்ஸ் எல்’ குழாய் அமைப்புத் திட்டத்தினை எதிர்த்து அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராடி வருகின்றனர். சர்ச்சைக்குரிய  இந்த திட்டத்துக்கு அளிக்கப்பட்ட  ஒப்புதலை ஜோ பைடன் திரும்பப் பெற்றுள்ளார்.

கொரோனோ தொற்றில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற நடைபெற்றுவரும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது

சில முஸ்லிம் நாடுகள் மீது  விதித்த பயணத் தடைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

.அதிபர் ஜோ பைடனின் இது போன்ற உத்தரவுகளினால், மக்களிடையே அவருக்கு செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.