Alangu Movie Review :
Cast : Gunanidhi, Kali Venkat, Semban Vinoth, Sarath Appani, Soundararaja, Sri Rekha, Shanmugam Muthusamy, Regin Rose, Idhayakumar, Master Ajay and Others.
Direction : SP Shakthivel
Music : Ajeesh
Production : DG Film Company and Megnas Productions – Sabarish and Sangamithra Soumiya Anbumani
அலங்கு திரைப்படத்தை, டிஜி பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரித்துள்ளனர். குணாநிதி, காளி வெங்கட் , செம்பன் வினோத், சரத் அப்பானி, சௌந்தர்ராஜா, ஸ்ரீலேகா , ரெஜின் ரோஸ், கொற்றவை, தீக்ஷா, நிரோஷா, அர்ச்சனா உள்ளிட்டவர்களது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம். எழுதி இயக்கியிருக்கிறார், எஸ் பி சக்திவேல். பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்க, அஜீஷ் இசையமைத்திருக்கிறார்.
மலைவாழ் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் நாயகன் குணாநிதி. காளி என்ற நாயை வளர்த்து வருகிறார். அந்த நாயுடன் மிகுந்த நட்பாக இருந்து வருகிறார். கேரளாவிற்கு வேலைக்காக செல்லும்போது, காளியையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவம் தொடர்பாக, குணாநிதியையும் அவருடன் வந்தவர்களையும் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அதிலிருந்து தப்பிக்க குணாநிதியும் அவரது கூட்டத்தினரும் அடர்ந்த காட்டுக்குள் நுழைகின்றனர். இதன் பிஒறகு என்ன நடந்தது? அதில் அலங்கு என்ன செய்தது? என்பதே ‘அலங்கு’ படத்தின் கதை.
மலைவாழ் பழங்குடியினராக ‘தர்மா’ என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான இளைஞராக, அந்த கதாபாத்திரத்துக்கான நேர்த்தியான நடிப்பினை கொடுத்திருக்கிறார். தனது நடிப்பினால் ரசிகர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் மனோபாவம் கொண்டவர், தனது காளிக்காக களத்தில் இரங்குவது சிலிர்ப்பு! சண்டைக்காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்காக உழைத்திருக்கும் குணாநிதிக்கு, தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு நிச்சயம்!
நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வரும் காளி வெங்கட், ‘மலையன்’ கதாபாத்திரத்தில் மனம் கவருகிறார். எதார்த்த நடிப்பின் இடையே அவர் செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது.
செம்பன் வினோத், நாய்கள் மீது காட்டும் வெறித்தனமும், கையை இழந்த சரத் அப்பானி, கொடும் வெறியோடு நாயகன் குணாநிதியை விரட்டிச்செல்லும் போதும் நடிப்பினால் மிரட்டியிருக்கிறார்கள்.
வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ரீரேகா, அவரது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.
மற்றபடி சவுந்தர்ராஜா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, ஏஞ்சல், மஞ்சுநாத் உள்ளிட்டவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமார், அடர்ந்த வனப்பகுதிகளின் அழகின் ஊடே திகிலூட்டியிருக்கிறார். நடிகர்களின் உணர்வுகளை இவரது ஒளிப்பதிவு அழகாக வெளிப்படுத்தி, திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது.
அஜீஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கச்சிதம்!
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.சக்திவேல், ’காளி’ என்ற நாயையும், அதன் செயல்பாடுகளையும் மிக தத்ரூபமாக படமாக்கியிருப்பதோடு, காட்டு விலங்குகளையும் காட்சிப்படுத்தி, படம் பார்ப்பவர்களை சீட் நுனியில் உட்காரவைக்கிறார். குறிப்பாக சிறுவர், சிறுமிகளை எளிதில் வசப்படுத்திவிடுகிறார்.
மொத்தத்தில், ‘அலங்கு’ மிரட்டல்!