‘Nayanthara’ – Beyond the Fairy Tale – ஆவணப்படம். விமர்சனம்!

டயானா மரியம் குரியன், என்ற இயற்பெயற் கொண்ட நயன்தாரா, மலையாள சினிமாவில் அறிமுகமானது, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் முதல், சொந்த வாழ்க்கையில் எதிர் கொண்ட பிரச்சனைகள், விக்னேஷ் சிவனுடனான காதல் கல்யாணம் வரை ஒரு ஆவணமாக தொகுத்துள்ள திரைப்படமே, ‘Nayanthara’ – Beyond the Fairy Tale. இதில், என்ன காரணத்திற்காகவோ, தொலைக்காட்சித்  தொகுப்பாளராக வேலை செய்ததை தவிர்த்துள்ளார், நயன்தாரா.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், மலையாளத்தில் 2003 ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படத்தில், நடிகர் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் ஐய்யா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகவும் அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்துடன் சந்திரமுகி, விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுடன் நடித்து,

தமிழுக்கு பின் தெலுங்கு திரையுலகிலும் நடித்து பிரபலமானவர், தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து, லேடி சூப்பர் ஸ்டாராக உருவானவர், சிம்பு, பிரபு தேவா உடனான காதல் வாழ்க்கைக்கு பிறகு விக்னேஷ் சிவனை காதலித்து கரம்பிடித்தவர், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். அனைவருக்கும் தெரிந்த அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை தவிர்த்து,  ‘Nayanthara’ – Beyond the Fairy Tale – ஆவணப்படத்தினை உருவாக்கியிருக்கிறார்.

‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara: Beyond the Fairy Tale) ஆவணப்படத்தில் அனைவரும் எதிர்பார்த்தது, அவரது காதல் கதைகளை மட்டுமே. அது மேலோட்டமாக சொல்லப்பட்டிருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விக்னேஷ் சிவன் உடனான காதல், திருமணத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தில், அவரது கல்யாணக் காட்சிகளும் குறைவாகவே இருக்கிறது. அதோடு இது ஒரு நேர்காணல் போல் இருப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது.

மொத்தத்தில், ’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’  ஆவணப்படம், மற்ற ரசிகர்களை திருப்தி படுத்தாவிட்டாலும், நயன்தாராவின் ரசிகர்களை திருப்தி படுத்தும்.